Share It

Friday, June 1, 2018

Vaanavalli | வானவல்லி

Vaanavalli | வானவல்லி 


===>>> 


ஒரு கதை சொல்லட்டுமா? இது கதைகளுக்கான களம். சிறுகதைகளும் தொடர் கதைகளும் மட்டுமே இங்கே இருக்கும். இலக்கியத்தில் எப்போதுமே கதைகளுக்குத் தனியிடம் உண்டு. 


சிறுவயதில் நம்மை சாப்பிட வைக்க முயற்சி செய்யும் போது ஆரம்பிக்கும் கதை சொல்லும் படலம் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. பொய் சொல்ல நேரும் போது இட்டுக்கட்டி சொல்வது கூட கதைதான். நமது அனுபவங்களை மற்றவர்களுக்கு சுவைபட விவரிப்பது கூட கதைதான். 

நாம் வாழ்ந்து மறைந்த பிறகு நமது வாழ்க்கையை மற்றவர்கள் நினைவு கூர்வது கூட கதைதான். இப்படியாக பிறப்பு முதல் இறப்பு வரை நாம் கதைகளுடனேயே வாழ்ந்து வருகிறோம். கதை சொல்வது நமக்கு இயல்பிலேயே இருக்கும் திறமைதான். ஆனாலும் அதனை எழுத்திலும் வெளிப்படுத்தத் தெரிந்தவர்களே கதாசிரியர்களாக மாறுகிறார்கள். 

நம் வாழ்வோடு இணைந்த கதைகளுக்குத் தனியிடம் கொடுப்பது தானே முறை? ஆகவே தான் கதைகளுக்கென தனிக் களத்தை அமைத்துள்ளோம். மேலும் 'வானவல்லி' என்னும் தலைப்புக்காக சரித்திர நாவலாசிரியர் சாளையக்குறிச்சி வெற்றிவேல் அவர்களுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம். சரி, வாங்க போகலாம்...

ஒரு கதை சொல்லட்டுமா? 

-சிகரம் 

No comments:

Post a Comment

Share It

Popular Posts