Share It

Friday, June 1, 2018

Vaanavalli | வானவல்லி

Vaanavalli | வானவல்லி 


===>>> 


ஒரு கதை சொல்லட்டுமா? இது கதைகளுக்கான களம். சிறுகதைகளும் தொடர் கதைகளும் மட்டுமே இங்கே இருக்கும். இலக்கியத்தில் எப்போதுமே கதைகளுக்குத் தனியிடம் உண்டு. 


சிறுவயதில் நம்மை சாப்பிட வைக்க முயற்சி செய்யும் போது ஆரம்பிக்கும் கதை சொல்லும் படலம் வாழ்வின் இறுதி வரை தொடர்கிறது. பொய் சொல்ல நேரும் போது இட்டுக்கட்டி சொல்வது கூட கதைதான். நமது அனுபவங்களை மற்றவர்களுக்கு சுவைபட விவரிப்பது கூட கதைதான். 

நாம் வாழ்ந்து மறைந்த பிறகு நமது வாழ்க்கையை மற்றவர்கள் நினைவு கூர்வது கூட கதைதான். இப்படியாக பிறப்பு முதல் இறப்பு வரை நாம் கதைகளுடனேயே வாழ்ந்து வருகிறோம். கதை சொல்வது நமக்கு இயல்பிலேயே இருக்கும் திறமைதான். ஆனாலும் அதனை எழுத்திலும் வெளிப்படுத்தத் தெரிந்தவர்களே கதாசிரியர்களாக மாறுகிறார்கள். 

நம் வாழ்வோடு இணைந்த கதைகளுக்குத் தனியிடம் கொடுப்பது தானே முறை? ஆகவே தான் கதைகளுக்கென தனிக் களத்தை அமைத்துள்ளோம். மேலும் 'வானவல்லி' என்னும் தலைப்புக்காக சரித்திர நாவலாசிரியர் சாளையக்குறிச்சி வெற்றிவேல் அவர்களுக்கு நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம். சரி, வாங்க போகலாம்...

ஒரு கதை சொல்லட்டுமா? 

-சிகரம் 

Kidz Park | மழலையர் பூங்கா

Kidz Park | மழலையர் பூங்கா 




Sigaram TV | சின்னத்திரை

Sigaram TV | சின்னத்திரை  



===>>> 


BIGG BOSS

CINEMA | வெள்ளித்திரை

SIGARAM CINEMA 



===>>>


வெள்ளித்திரை திரைப்பட முன்னோட்டங்கள், பாடல்கள், திரைப்பட வெளியீடு, விருது நிகழ்வுகள் மற்றும் பல தகவல்களை உங்களுக்கு சிகரம் உடனுக்குடன் வழங்குவதற்காக இந்தத் தளத்தை அறிமுகம் செய்கின்றது. 

தமிழில் வெள்ளித்திரை செய்திகளை மட்டும் சிகரம் உங்களுக்காக இங்கு தொகுத்து வழங்கவுள்ளது. முடிந்த அளவில் விரைவாகவும் முழுமையாகவும் வெள்ளித்திரை செய்திகளை சிகரம் விரைவாக உங்களுக்கு இங்கே அளிக்கும். 

-சிகரம் 

Business Today | இன்றைய வணிகம்

Business Today | இன்றைய வணிகம்  


===>>> 




வணிக உலகில் நாளுக்கு நாள் நடைபெறும் மாற்றங்கள் குறித்து நாம் அறிந்திருப்பது அவசியமாகும். வணிக செய்திகளை நாம் நமக்கு தேவையற்றது என நினைத்துக் கொண்டாலும் நாம் முக்கியத்துவம் கொடுக்கும் அரசியல் செய்திகளை விட வணிகச் செய்திகளே நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. 

பணவீக்கம், விலையேற்றம், நாணய மாற்று விகிதம் என்பன குறித்த தகவல்களை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். சிகரம் இணையத்தளத்தின் இந்தத் தளத்தின் ஊடாக நாம் உங்களுக்கு முக்கியமான வணிகச் செய்திகள் மற்றும் தகவல்களை தொகுத்துத் தரவுள்ளோம். 

-சிகரம் 

Sigaram Today | சிகரம் இன்று

Sigaram Today | சிகரம் இன்று  


===>>>




தினமும் நம்மைச் சுற்றியும் உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். தற்போது இணையத்தளங்கள் வாயிலாக செய்திகள் உடனுக்குடன் உலக மக்களைச் சென்றடைகின்றன. 

உள்ளங்கையில் உலக நடப்புகளை இணையத்தளம் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. தொழிநுட்பமயமாதல் காரணமாக பத்திரிகைகளை விட இணையத்தளங்களையே மக்கள் அதிகம் நாடுகின்றனர். 

அந்த வகையில் சிகரம் இணையத்தளத்தின் இந்தத் தளம் வாயிலாக நீங்கள் உலக நடப்புகளையும் முக்கிய நிகழ்வுகளையும் அறிந்து கொள்ள முடியும். உங்கள் ஆதரவை இந்தத் தளத்திற்கும் வழங்குவீர்கள் என நம்புகிறோம். 

-சிகரம் 

Share It

Popular Posts